CricketArchive

ஹர்பஜன் சிங்
by CricketArchive


Player:Harbhajan Singh

DateLine: 11th July 2008

 

முழுப்பெயர்: ஹர்பஜன் சிங்

 

பிறப்பு: ஜூலை, 3, 1980, ஜுலுந்தர் (தற்போது ஜலந்தர்) பஞ்சாப், இந்தியா

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்பந்து வீச்சாளர், வலப்புறம் சுழன்று திரும்பும் படியான சுழல் வீச்சு

 

அணியில் வீரரின் நிலை: பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இந்தியா, ஆசியா லெவன், மும்பை இந்தியன்ஸ், லாங்கஷையர், சர்ரே.

 

அறிமுகம்:
டெஸ்ட் போட்டி: மார்ச் 25-28, 1998, இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: ஏப்ரல் 17, 1998 அன்று இந்தியா - நியூசிலாந்து இடையே சார்ஜாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: டிசம்பர் 1, 2006 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

இந்தியா கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். . பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜலந்தரில் பிறந்தவர். பஜ்ஜி என்றும், பாஜி என்றும் அணியினரால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஹர்பஜன் சிங். ஆக்ரோஷமான சுழற்பந்துவீச்சாளர். இவரது நேர்த்தியான சுழற்பந்துவீச்சால் எதிராளி ரன் எடுக்கத் திணறுவார். எளிதில் இவரது சுழலில் வீழ்ந்தும் விடுவார்.

 

ஏப்ரல் 17, 1998 அன்று இந்தியா - நியூசிலாந்து இடையே சார்ஜாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில்தான் இவர் முதன்முதலாக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அதன்பிறகு அணியில் தொடர்ந்து விளையாட ஆரம்பித்தார். இதே ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார்.

 

2001-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி அத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

 

ஒரு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில், (இப்போட்டியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி) இரண்டாவது வீரராக இடம்பிடித்தார். மேலும், இத்தொடரின் நாயகனாகவும் விருது பெற்றார்.

 

இதுவரை அவர் டெஸ்ட் போட்டிகளில், ஒரு இன்னிங்ஸில் 21 முறை, 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரு இன்னிங்ஸையும் சேர்த்து 4 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

சுழற்பந்து வீச்சு மட்டுமல்ல சில நேரங்களில் அதிரடியாக பேட்டிங் செய்வதிலும் வல்லவர். அணியின் நெருக்கடியான தருணங்களில் அற்புதமாக பந்து வீசுவது மட்டுமின்றி, பேட்டிங் செய்தும் அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.

 

2001-ல் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்நாட்டுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 66 ரன்கள் குவித்தார். இதுவே டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ரன்களாகும். பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணிக்கெதிராக 2 அரைசதங்களும், இங்கிலாந்து அணிக்கெதிராக ஒரு அரைசதமும் விளாசியுள்ளார்.

 

ஒருதினப்போட்டியில் இவரது சிறந்த பந்து வீச்சு இங்கிலாந்திற்கு எதிராக அமைந்தது. 2002-ல், மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருதினப்போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

2007, அக்டோபரில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, அந்நாட்டு வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸிற்கும், இவருக்கும் உரசல் ஏற்பட்டது. 2008- ஜனவரியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸிடம் இனவெறி தூண்டும் வகையில் பேசியதாக சர்ச்சைக்குள்ளாகி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடையும் பெற்றார். மேல் முறையீடு செய்ததில் அந்த தண்டனை குறைக்கப்பட்டது.

 

இந்த சர்ச்சை ஓய்ந்து முடிவதற்குள் இந்திய வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த சர்ச்சையில் சிக்கினார். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சச்சின் இருந்தார். ஆனால், அப்போட்டித் தொடரில் காயம் காரணமாக முதல் பாதி ஆட்டங்களில் விளையாடவில்லை

 

அதனால் ஹர்பஜன்சிங் மும்பை அணிக்கு தலைமையேற்று விளையாடினார். அப்போது பஞ்சாப் அணியுடன் மும்பை அணி தோல்வியுற்றதால், அவரை கேலி செய்த சகவீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்ததாக புகார் கூறப்படட்டது. அதற்காக அவருக்கு 11 இருபது ஓவர் போட்டிகளிலும் 5 ஒருதினப்போட்டிகளிலும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டார். இதனால் அவர் வங்கதேசத்தில் நடைபெற்ற தொடரிலும், பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டியிலும் விலக்கி வைக்கப்பட்டார்.

 

(தண்டனைக்குப் பிறகு) அண்மையில் இலங்கையில் நடைபெற்ற தொடரில் மீண்டும் இடம்பிடித்து விளையாடினார். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். இத்தொடரில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.

 

டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 9 விக்கெட்டுகளை எடுத்தால் 300 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல் கல்லையும், ஒருதினப் போட்டிகளில் இன்னும் 5 விக்கெட்டுகளை எடுத்தால் 200 ஒருதின விக்கெட்டுகள் என்ற மைல் கல்லையும் எட்டுவார்.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive