CricketArchive

பிராட் ஹாடின்
by CricketArchive


Player:BJ Haddin

DateLine: 4th September 2008

 

முழுப்பெயர்: பிராட்லி ஜேம்ஸ் ஹாடின்

 

பிறப்பு: 23 அக்டோபர் 1977, கௌவ்ரா, நியூ சவுத்வேல்ஸ், ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: மட்டை வீச்சாளர் , விக்கெட் கீப்பர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியன் கேபிட்டல் டெரிட்டரி, நியூ சவுத்வேல்ஸ்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: மே 22-26, 2008, ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையே கிங்ஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: ஜனவரி 30, 2001 அன்று ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையே ஹோபர்ட்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜனவரி 13, 2005 அன்று ஆஸ்திரேலியா - பாகிஸ்தானிஸ் இடையே அடிலெய்டில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர். முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ஆடம் கில்கிறிஸ்டின் ஓய்விற்குப் பிறகு அவரது இடத்தை சரியான முறையில் நிரப்ப வந்திருக்கும் வீரர்.

 

2001-ல் தனது ஒருதின கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்தாலும், கில்கிறிஸ்டின் ஓய்விற்குப் பிறகே இவரால் அணிக்குள் வரமுடிந்தது. அது மட்டுமின்றி இவருக்கு போட்டியாக மூன்று விக்கெட் கீப்பர்கள் ஆஸ்திரேலியாவிலேயே இருந்தனர். இருப்பினும் தனது சிறப்பான ஆட்டத் திறமையால் அவர்களை பின்னுக்குத் தள்ளி அணியில் இடம் பிடித்தார்.

 

19வயதிற்குள்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக விளையாடினார். 1997-98 காலகட்டத்தில் ஆஸ்திரேலியன் கேபிட்டல் டெரிட்டரி அணியின் சார்பில் விளையாடினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நியூ சவுத்வேல்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடினார்.

 

உள்ளூர் போட்டிகளான மெர்கன்டைல் மியூச்சுவல் கோப்பை தொடர், ஐ.என்.ஜி கோப்பை தொடர், புரா கோப்பை தொடர், போர்டு ரேஞ்சர் கோப்பைத் தொடர் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி, அவரது அணிக்கு வெற்றிகளைத் தேடித் தந்தார்.

 

இதனால் 2001-ல் ஜிம்பாப்வேவிற்கு எதிரான சர்வதேச ஒருதினத் தொடரில் முதன்முதலாக இடம்பிடித்தார். ஜனவரி 30, 2001 அன்று ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையே ஹோபர்ட்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் முதன் முதலாக அறிமுகமானார். இதன் பிறகு இடையிடையே அணியில் விளையாடினாலும், சரிவர தனது திறமையை நிரூபிக்காததால் அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

 

செப்டம்பர் 2006-ல், மலேசியவில் நடைபெற்ற டி.எல்.எப் முத்தரப்பு கோப்பைத் தொடருக்கான அணியில் இடம்பிடித்து விளையாடினார். இத்தொடரின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான தகுதிச்சுற்று போட்டியில் சிறப்பாக ஆடி 70 ரன்கள் குவித்தார். மேலும் தனது முதல் ஒருதின அரை சதத்தையும் பதிவு செய்தார். மேலும், இத்தொடரின் இறுதிப்போட்டியில் அசத்தலாக கீப்பிங் செய்து, மூன்று விக்கெட்டுகளை வெளியேற்றி அணி கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார்.

 

இதன்பிறகு 2007- செப்டம்பரில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 7 ஒருதினப் போட்டிகளில் விளையாடியது. அத்தொடருக்கான அணியில் பேட்ஸ்மேனாக இடம்பிடித்து ஆடினார். இத்தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் உள்பட 200 ரன்கள் குவித்தார்.

 

இரு அணிகளுக்கும் இடையே பெங்களூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 69 ரன்கள் குவித்தார். கொச்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 69 பந்துகளில் அதிரடியாக ஆடி 87 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றது மட்டுமின்றி ஒருதின அரங்கில் தனது அதிகபட்ச ரன்னையும் பதிவு செய்தார்.

 

2001-ல் ஒருதின அணியில் இடம்பிடித்தவர் சரியான பார்ம் இல்லாத காரணத்தாலும், காயம் காரணமாகவும் அணியில் நீடிக்காமல் போனார். 2001-ல் ஒருதின அணியில் நுழைந்த இவர் மே, 2008-ல்தான் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க முடிந்தது.

 

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த, டெஸ்ட் மற்றும் ஒருதின ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே கிங்ஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை ஆரம்பித்தார். இப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்யா விட்டாலும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயலாற்றினார். 3 போட்டிகளி கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வென்றது. இதில் முதல் போட்டியிலும், மூன்றாம் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதற்கு இவரது சிறப்பான கீப்பிங் பணியும் ஒரு காரணமாகும்.

 

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருதினப்போட்டியில் சிறப்பாக ஆடி 50 ரன்கள் குவித்தார். கீப்பிங்கும் சிறப்பாக செய்தார். இதனால் அவரது அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் முடிவில் இவருக்கு கையில் காயம் ஏற்பட்டதால் அடுத்த போட்டிகளில் விளையாடவில்லை.

 

தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

 

வெளியான தேதி: 02.09.08

 


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive