CricketArchive

சைமன் கேடிச்
by CricketArchive


Player:SM Katich

DateLine: 8th September 2008

 

முழுப்பெயர்: சைமன் மேத்யூ கேடிச்

 

பிறப்பு: 21 ஆகஸ்ட் 1975, மிடில் ஸ்வான், மேற்கு ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: இடதுகை சுழற்ப்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, கிங்ஸ் லெவன் பஞ்சாப், துர்ஹாம், ஹாம்ப்ஷையர், டெர்பிஷையர், யார்க்ஷையர், நியூசவுத்வேல்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா.

 

அறிமுகம்:
டெஸ்ட் போட்டி: ஆகஸ்ட் 16-20, 2001, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே லீட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: ஜனவரி 21, 2001 அன்று ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையே மெல்போர்னில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜூன் 13, 2003 அன்று ஹாம்ப்ஷையர் - சஸ்ஸெக்ஸ் இடையே சௌதாம்ப்டனில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை ஆட்டக்காரர். ஆஸ்திரேலிய அணியில் 2001-ல் இடம்பிடித்தவர். உள்ளூர் போட்டிகளில் சதனைகள் படைத்தவர் சைமன் கேடிச்.

 

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மிடில் ஸ்வான் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். 1995-ல் கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்தார். இளம் வயதில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் நியூசவுத்வேல்ஸ் அணியில் விளையாடினார்.

 

2000-01 ல் நடைபெற்ற புரா கோப்பை தொடரில் மேற்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக விளையாடினார். இத்தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் (அதில் ஒன்று இரட்டைசதம்), 2 அரை சதங்கள் உள்பட 1145 ரன்கள் குவித்தார். இவரது திறமையைக் கண்டுகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இவரை சர்வதேச ஒருதின அணியில் சேர்த்தது. ஜனவரி 21, 2001 அன்று ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையே மெல்போர்னில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் சர்வதேச அளவில் முதன் முதலாக அறிமுகமானார். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆனால் இவர், பேட்டிங் செய்யவில்லை. இதே வருடத்தில், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இங்கிலாந்திற்கெதிரான 4 வது டெஸ்ட்டில் தனது டெஸ்ட் அறிமுகத்தை துவக்கினார். அதன்பிறகு அணியில் இடம்பெறுவதும், வெளியேற்றப்படுவதுமாக இருந்தார்.

 

2003-ல் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையே சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக ஆடி 52 ரன்கள் குவித்தார். மேலும் தனது சிறப்பான சுழற்ப்பந்து வீச்சால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு உதவினார். இது இவர் ஆடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகும்.

 

2003-04 ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 4 வது டெஸ்டில் சிறப்பாக ஆடி 125 ரன்கள் குவித்து, டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

 

இதன்பிறகு இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இடம்பிடித்து விளையாடினார். இதற்கடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடமுடியாமல் போனதால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

 

அதனால் உள்ளூர் போட்டிகளில் விளையாடினார் சைமன் கேடிச். 2007-08 ல் நடைபெற்ற புரா கோப்பை தொடரில், நியூசவுத்வேல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி, தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார். இக்கோப்பைக்கான இறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார்.

 

இத்தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் (ஒரு இன்னிங்ஸில் மட்டும் 306 ரன்கள்), 8 அரை சதங்கள் உள்பட 1506 ரன்கள் குவித்து அசத்தினார். அந்த ஆண்டின் புரா கோப்பை வீரர் விருதைப் பெற்றார். உள்ளூர் போட்டிகளில் நடைபெற்ற ஒரு தொடரில் அதிகபடசமாக (2004-05ல்) மைக்கேல் பெவன் 1464 எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையையும் தகர்த்தார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

 

இதன்பிறகு 2008-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்தார். இத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உள்பட 319 ரன்கள் குவித்தார்.

 

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டனா பொறுப்பேற்றுள்ளார்.

 

வெளியான தேதி: 8.9.08

 

 


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive