CricketArchive

கொல்கத்தாவின் அரையிறுதி கனவு தகர்ந்தது
by CricketArchive


Scorecard:Delhi Daredevils v Kolkata Knight Riders
Event:Indian Premier League 2007/08

DateLine: 23rd May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவு ஆட்டம்), 47-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: பெரோஷ் ஷா கோட்லா மைதானம். டெல்லி.
தேதி: 22.05.2008. வியாழக் கிழமை.
மோதிய அணிகள்: கொல்கத்தா அணி - டெல்லி அணி
முடிவு: ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பபட்டது
ஆட்ட நாயகன்: மழை

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 47-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு தில்லியிலுள்ள பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் அங்கு பெய்த கோடை மழையால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

ஓரு பந்துகூட வீசப்படாமல் இத் தொடரில், ஒரு போட்டி முற்றிலும் கைவிடப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதனால் கங்குலி தலைமையிலான கொல்கத்தா அணியின் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் தகர்ந்து போனது. அந்த அணி இதுவரை மொத்தம் 13 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் உள்ள இந்த அணிக்கு, இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே மீதமுள்ளது.

அதே சமயம் சேவாக் தலைமையிலான டெல்லி அணி இப்போட்டியோடு சேர்த்து 13 புள்ளிகளைச் பெற்றுள்ளது. இந்த அணிக்கும் இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே உள்ளது. அதில் வெற்றி பெற்றாலும், அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு சற்று கடினமாகவே இருக்கும்.

ஆனால் இந்த இரு அணிகளும் 5 இடத்தைப் பிடிப்பதற்கு போராடும் என்று எதிர்பார்க்கலாம்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மழை தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive