| Player: | Yuvraj Singh |
DateLine: 18th August 2008
முழுப்பெயர்: யுவராஜ்சிங்
 
பிறப்பு: 12 டிசம்பர் 1981. சண்டிகார். இந்தியா. 
மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: இடதுகை சுழற்பந்து வீச்சாளர் 
அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர் 
விளையாடிய அணிகள்: இந்தியா, ஆசிய கிரிக்கெட் லெவன், பஞ்சாப், யார்க் ஷையர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: அக்டோபர் 16-20, 2003, இந்தியா - நியூசிலாந்து இடையே மொகாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.ஒருதினப் போட்டி: அக்டோபர் 3, 2000 அன்று இந்தியா - கென்யா இடையே நைரோபியில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: செப்டம்பர் 13, 2007 அன்று இந்தியா - ஸ்காட்லாந்து இடையே டர்பனில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
இந்திய அணியின் சிறந்த இடதுகை ஆட்டக்காரர். சிறந்த பீல்டர் யுவராஜ்சிங். 
இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான யோக்ராஜின் மகன் இவர். இவரது தந்தை கிரிக்கெட் வீரர் என்பதால் இளம் வயதிலிருந்தே இவர் கிரிக்கெட்டை நேசிக்கத் துவங்கி விட்டார் எனலாம். இவர் இளங்கலை பட்டம் பெற்றவர். 
18 வயத்க்குட்பட்டோருக்கான பஞ்சாப் அணியில் இவர் சிறப்பாக விளையாடவும், இந்திய அணித் தேர்வாளர்களின் பார்வை இவர் மேல் விழுந்தது. 2000-2001 ஆண்டில் மினி உலகக் கோப்பை போட்டி கென்யாவில் நடைபெற்றது. அப்போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங் இடம்பெற்றார். 
இவர் தனது 18 வது வயதில் கென்ய அணிக்கெதிராக 2000-ல் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இவர் அறிமுகமான போட்டியில் இவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. 
இவரது இரண்டாவது ஒருதினப்போட்டி ஆஸ்திரேலிய அணிக்கெதிரானது ஆகும். அப்போட்டியில் இவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வேதளங்களான கிளென் மெக்ரத், பிரெட் லீ, கில்லெஸ்பி ஆகியோரது பந்துவீச்சுகளை துவம்சம் செய்து 80 பந்துகளில் 84 ரன்கள் குவித்து, அப்போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு காரணமாக இருந்தார். அப்போட்டியின் ஆட்டநாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார். 
இவரது அதிரடி ஆட்டமும், அருமையான பீல்டிங் திறமையும் இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரராக நிலைத்து இருந்தார். இடையில் இவரது ஆட்டத்திறமை பாதிக்கப்பட்டதாலும், அணி வீரர்களுடன் இணக்கமில்லாத வகையில் நடந்து கொண்டதாலும் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 
இதன் விளைவாக இவர் கடுமையாக பயற்சி செய்து அணியில் மீண்டும் இடம் பிடித்தார். 2001-ல் நாட்வெஸ்ட் கோப்பைக்கான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இவரது ஆட்டம் பாராட்டத்தகுந்ததாக இருந்தது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்திற்காக இவரது அதிரடியால் அணி வெற்றி பெற்றது. 
ஒருதினப் போட்டியில் மூன்று ஆண்டுகள் விளையாடிய பிறகே இவருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணியின் அப்போதைய டெஸ்ட் கேப்டன் சவுரவ் கங்குலி காயம் காரணமாக அணியில் இடம் பெறாததால், அவருக்கு பதிலாக யுவராஜ்சிங் தேர்வு செய்யப்பட்டார். 
பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஒருதினப் போட்டியைப் போல் விளையாடி 110 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 
2005-06 ஆண்டில் 58 ஒரு தினப் போட்டிகளில் விளையாடி 1161 ரன்களைக் குவித்து அணியில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் நிலையான இடத்தைப் பிடித்தார். 
2007 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தகுதிச் சுற்று ஆட்டங்களோடு வெளியேறினாலும். இவரது ஆட்டத் திறமை தடைபடவில்லை. அந்த ஆண்டின் பின்பாதியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஒரு புதிய சாதனையைப் படைத்தார். 
இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடிய போது அந்த அணியின் வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளையும், வாண வேடிக்கை காட்டி 6 சிக்ஸர் அடித்து 20 ஓவர் போட்டிகளில் உலக சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி 12 பந்துகளில் 50 ரன்கள் அடித்தும் மற்றெரு சாதனை படைத்தார். இந்திய அணி முதன் முதலாக நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றியதில் இவருக்கும் பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனாக தலைமையேற்று, அரையிறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்திச் சென்றார். 
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து, ஒருதினப்போட்டியில் விளையாடினார். 
இவர் திறமை வாய்ந்த இளம் வீரர் என்பது மட்டுமல்ல, அதிரடி வீரர் லாராவைப் பொல இந்திய அணியில் விளையாடக் கூடியவர். இந்தியாவின் ஜான்டி ரோட்ஸ் என்று புகழ்கின்ற அளவிற்கு துடிப்பான பீல்டர். இக்கட்டான நேரங்களில் பந்துவீசி எதிரணியை திணறடிப்பவர். சிறந்த ஆல்ரவுண்டர். 
கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08LATEST SCORES
CURRENT EVENTS
- Afghanistan in Zimbabwe 2025/26
- Canada Women in Uganda 2025/26
- Cyprus International Twenty20 Tri-Series 2025/26
- England in New Zealand 2025/26
- ICC Men's Cricket World Cup League Two 2023/24 to 2027
- ICC Women's World Cup 2025/26
- India in Australia 2025/26
- Ireland in Bangladesh 2025/26
- South Africa in Pakistan 2025/26
- Sri Lanka in Pakistan 2025/26
- West Indies in Bangladesh 2025/26
- West Indies in New Zealand 2025/26
View all Current Events CLICK HERE


