Player: | V Kohli |
DateLine: 19th August 2008
முழுப்பெயர்: விராட் கோஹ்லி
 
பிறப்பு: நவம்பர் 5, 1988, டெல்லி, இந்தியா. 
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் 
விளையாடிய அணிகள்: இந்தியா, இந்தியா ரெட், டெல்லி, பெங்களூர் ராயல் சேரஞ்சர்ஸ், 19 வயதிற்குள்பட்டோருக்கான இந்திய அணி. 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லைஒருதினப் போட்டி: ஆகஸ்டு 18, 2008 அன்று இந்தியா - இலங்கை இடையே தம்புல்லாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஏப்ரல் 3, 2007 அன்று டெல்லி - இமாச்சலப் பிரதேசம் இடையே டெல்லியில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
இந்தியா கிரிக்கெட் அணியின் நடுவரிசையை பலப்படுத்த வந்த புதிய பேட்ஸ்மேன். வீரேந்திர ஷேவாக், கௌதம் காம்பீர் போன்ற வீரர்களைக் கொடுத்த டெல்லி நகரில் பிறந்தவர் விராட் கோஹ்லி. 
அணியில் 4 வது வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடக் கூடியவர். 17 வயதுக்குள்பட்ட தில்லி அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடினார். 
முதல்தரப் போட்டிகளில் இவர் முதன் முதலாக 2006-07 ரஞ்சி கோப்பை போட்டிக்கான டெல்லி அணியில் இடம்பிடித்தார். இதையடுத்து 2008-ல் 19 வயதிற்குள்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
பிப்ரவரி 2008 முதல் மலேசியாவில் நடைபெற்ற, 19 வயதிற்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று கோப்பையை வென்று காட்டியவர். இப்போட்டித் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 235 ரன்கள் குவித்தார் 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் பெங்களூர் ராயல் சேரஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணிக்காக, மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் குவித்தார். 
இதையடுத்து ஜூலை- 2008, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எமெர்ஜிங் பிளேயர்ஸ் கிரிக்கெட் போட்டித் தொருக்கான இந்திய நேஷனல் கிரிக்கெட் அகாதெமி அணியில் இடம் பிடித்து விளையாடினார். இத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 1 சதம், 1 அரைசதம் உள்பட 206 ரன்கள் குவித்தார். 
இதன் பயனாக, தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் ஒருதினத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். 
வெளியான தேதி: 19.08.08LATEST SCORES
CURRENT EVENTS
- Bahrain Women in Oman 2025
- Botswana Kalahari Women's International Twenty20 Tournament 2024/25
- Cook Islands in Japan 2025
- Croatia Women in Malta 2025
- Cyprus Women in Czech Republic 2025
- Estonia in Malta 2025
- Germany Women in Greece 2025
- ICC Men's Cricket World Cup League Two 2023/24 to 2027
- ICC World Test Championship 2023 to 2025
- Japan International Twenty20 Tri-Series 2025
- Malaysia Quadrangular International T20 Series 2024/25
- North America Cup 2025
- Sri Lanka Women's Tri-Series 2024/25
- Thailand Women's Quadrangular T20 Tournament 2025
- Zimbabwe in Bangladesh 2024/25
- Zimbabwe in England 2025
- Zimbabwe Women in United States of America 2025
View all Current Events CLICK HERE
