Player: | A Symonds |
DateLine: 1st September 2008
முழுப்பெயர்: ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
 
பிறப்பு: 9 ஜூன் 1975, பிர்மிங்ஹாம், வார்க்விக்ஷையர், இங்கிலாந்து. 
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர் 
அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர் 
விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, 19 வயதிற்குள்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணி, டெக்கான் சார்ஜர்ஸ், குயின்ஸ்லாந்து, க்ளோசெஸ்டர்ஷையர், கென்ட், லாங்கஷையர். 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: மார்ச் 8-12, 2004, ஆஸ்திரேலியா - இலங்கை இடையே காலேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.ஒருதினப் போட்டி:நவம்பர் 10, 1998 அன்று ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே லாகூரில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜூன் 16, 2003 அன்று கென்ட் - ஹாம்ப்ஷையர் இடையே பெக்கென்ஹாமில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
ஆஸ்திரேலிய அணியின் பலம் வாய்ந்த ஆல்ரவுண்டர். அணி நெருக்கடியான சூழல்களில் தவிக்கும் போது பேட்டிங்கிலும் சரி, பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படும் வீரர். சிக்ஸர் விளாசுவதில் அதிரடி வீரர். 
இங்கிலாந்திலுள்ள பிர்மிங்ஹாமில் பிறந்தவர். இவர் கென், பார்பரா என்ற ஆங்கிலேய தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டார். இவர் மூன்று மாத குழந்தையாக இருக்கும் போது, இவரது வளப்பு பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். 
ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளியில் படிக்கும் போதே விளையாட்டில் அதிக ஈடுபாடு காட்டினார். ''எனது தந்தை கென்ட் தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதால், எனக்கு வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளி செல்வதற்கு முன்பும், சென்று வந்த பின்பும் பேட்டிங் செய்யச் சொல்லி, அவரே எனக்கு பந்தும் வீசுவார்'' என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் சைமண்ட்ஸ். இப்படியாக இவரது கிரிக்கெட் ஆர்வம் சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட்டது. 
இங்கிலாந்து அணியில் விளையாடி இருக்க வேண்டியவர். ஆனால், இவரது கனவு ஆஸ்திரேலிய அணியில்தான் விளையாட வேண்டுமென்று இருந்தது. அக்கனவை தன் கிரிக்கெட் திறமையில் நிறைவேற்றிக் கொண்டார். 
1992-ல் கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்து, குயின்ஸ்லாந்து கோல்ட்ஸ் அணிக்காக விளையாடினார். 19 வயதிற்குள்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். இதன்பிறகு இங்கிலாந்துள்ள க்ளோசெஸ்டர்ஷையர் அணியில் இடம் பிடித்து விளையாடினார். 
1995-ல், இங்கிலாந்தில், க்ளோசெஸ்டர்ஷையர் அணிக்கும், கிளாமர்கன் அணிக்கும் நடைபெற்ற கவுன்டி போட்டியில் இவர் முதல் இன்னிங்ஸில் 16 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்தார். மேலும் இந்த இன்னிங்ஸில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் குவித்தார். இப்போட்டிக்குப் பிறகு கிரிக்கெட் உலகில் இவர் பெயர் பிரபலமாகத் தொடங்கியது. 
இதன்பிறகு இங்கிலாந்திலுள்ள கவுண்டி அணிகளிலும், ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டிகளிலும் மிகச்சிறப்பாக விளையாடியதால் இவரது திறமையைக் கண்டுகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இவரை 1998-நவம்பரில், பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்த ஆஸ்திரேலிய ஒருதின அணியில் சேர்த்தது. 
நவம்பர் 10, 1998 அன்று இரு அணிகளுக்கும் இடையே லாகூரில் நடைபெற்ற 3-வது ஒருதினப் போட்டியில் சர்வதேச அளவில் முதன் முதலாக அறிமுகமானார். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இவர் அப்போட்டியில் பேட்டிங் செய்யவில்லை. 
அதன் பிறகு ஆஸ்திரேலிய ஒருதின அணியில் இடம்பிடித்து விளையாடினாலும் அவ்வளவாக ரன் குவிக்க முடியவில்லை. இருப்பினும் இவர் ஆல்ரவுண்டர் என்ற வகையில் அணியில் நீடித்திருந்தார். 
2003-ல், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில்தான் இவரது முழுத்திறமையும் பளிச்சிட்டது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு இவர் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். 
இத்தொடரில் பாகிஸ்தான் அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் 125 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து அவரது அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் ஒருதின அரங்கில் தனது முதல் சதத்தையும், அதிகபட்ச ரன்னையும் பதிவு செய்தார். இத்தொடரில், இந்தியாவிற்கெதிரான இறுதிப்போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கோப்பையை வெல்வதற்கு இவரும் ஒரு காரணியாக இருந்தார். இத்தொடரில் மொத்தம் 8 போட்டிகளில் விளையாடி 1 சதம், 2 அரைசதங்கள் உள்பட 326 ரன்கள் குவித்தார். சாராசரி 163.00 ரன்கள். 
இதையடுத்து, 2004-ல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார். 5 போட்டிகள் கொண்ட ஒரு தினத் தொடரில் 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இத்தொடரில் ஆல்ரவுண்டராக கலக்கிய சைமண்ட்ஸ் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
இது மட்டுமின்றி இத்தொடரின் போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தார். இவர் ஒருதினப்போட்டிகளில் விளையாட ஆரம்பித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகே இவரால் டெஸ்ட்டில் இடம் பிடிக்க முடிந்தது. 
மார்ச் 8-12, 2004, ஆஸ்திரேலியா - இலங்கை இடையே காலேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் தனது டெஸ்ட் அரங்கில் காலடி வைத்தார். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 
2005, டிசம்பரில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதிய டெஸ்ட் போட்டியில் 156 ரன்கள் குவித்து டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தையும், அதிகபட்ச ரன்னையும் பதிவு செய்தார். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 
2006-07 காலகட்டத்தில் இவர் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி ஆடிய போட்டிகளில் வெற்றி பெற போராடியது என்றே சொல்லவேண்டும். 2007-ல் உலகக்கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் போது அணியில் மீண்டும் இடம்பிடித்து அணி கோப்பையை வெல்வதற்கு உதவினார். மேலும் இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் தொடரிலும் தனது திறமையை காட்டியுள்ளார். 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். இவரது அணிக்காக, மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 161 ரன்கள் குவித்தார். 
தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால், அணியின் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 
வெளியான தேதி: 28.8.08LATEST SCORES
CURRENT EVENTS
- Bahrain Women in Oman 2025
- Botswana Kalahari Women's International Twenty20 Tournament 2024/25
- Cook Islands in Japan 2025
- Croatia Women in Malta 2025
- Cyprus Women in Czech Republic 2025
- Estonia in Malta 2025
- Germany Women in Greece 2025
- ICC Men's Cricket World Cup League Two 2023/24 to 2027
- ICC Women's T20 World Cup Asia Qualifier 2025
- ICC World Test Championship 2023 to 2025
- Japan International Twenty20 Tri-Series 2025
- Malaysia Quadrangular International T20 Series 2024/25
- Sri Lanka Women's Tri-Series 2024/25
- Thailand Women's Quadrangular T20 Tournament 2025
- West Indies in Ireland and England 2025
- West Indies Women in England 2025
- Zimbabwe in England 2025
- Zimbabwe Women in United States of America 2025
View all Current Events CLICK HERE
