Player: | RT Ponting |
DateLine: 8th September 2008
முழுப்பெயர்: ரிக்கி தாமஸ் பாண்டிங்
பிறப்பு: 19 டிசம்பர் 1974, லாங்செஸ்டன், டாஸ்மானியா, ஆஸ்திரேலியா.
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்
பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்
அணியில் வீரரின் நிலை: பேட்ஸ்மேன், கேப்டன்
விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, சர்வதேச உலக லெவன், டாஸ்மானியா, சோமர்செட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
அறிமுகம்: டெஸ்ட் போட்டி: டிசம்பர் 8-11, 1995, இலங்கை - ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: பிப்ரவரி 15, 1995 அன்று ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே வெல்லிங்டனில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜூலை 2, 2004 அன்று சோமர்செட் - நார்த்தாம்ப்டன்ஷையர் இடையே டான்டனில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். டெஸ்ட், ஒருதின ஆட்டம் என இரண்டிலும் 10,000 ரன்களைக் கடந்த முதல் ஆஸ்திரேலிய வீரர். 2003, 2007 என இரண்டு முறை ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்தவர் ரிக்கி பாண்டிங்.
ஆஸ்திரேலியாவில் உள்ள லாங்செஸ்டன் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர் பாண்டிங். தனது 17 வது வயதில் உள்ளூர் அணியான டாஸ்மானியா அணியில் இடம்பிடித்தார். 20 வயதில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தார்.
1995,ல் நியுசிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருதினத் தொடரில் இடம்பிடித்தார். இத்தொடரின்போது தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக வெல்லிங்டனில் நடைபெற்ற போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தை ஆரம்பித்தார். இதே ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தையும் ஆரம்பித்தார். தான் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 96 ரன்கள் குவித்து அசத்தினார்.
1996, ஜனவரி 9 அன்று மெல்போர்னில் இலங்கைக்கு எதிரான ஒருதினப்போட்டியில் சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் குவித்தார். ஒருதின அரங்கில் இவர் அடித்த முதல் சதம் இதுவாகும். அன்று தொடங்கி இன்று வரை சர்வதேச ஒருதின அரங்கில் 25 சதங்களுக்கும் மேல் விளாசியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலும், ஒருதினப் போட்டிகளிலும் தனது திறமையான பேட்டிங்கால் அணிக்கு வெற்றிகளை பெற்றுத் தந்தார். 2002-ல், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் ஓய்விற்குப் பிறகு, யாரை அணியின் கேப்டனாக நியமிப்பது என ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகம் யோசித்தது. ஏனென்றால் கேப்டன் பதவிக்கு ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தகுதியாக இருந்தனர். கடைசியில் பாண்டிங்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2003-04 காலகட்டத்தில் டெஸ்ட் அணியிலும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
இவருக்கு கேப்டன் பதவி வழங்கியதன் பலனை 2003 உலகக் கோப்பை போட்டியின் போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அனுபவித்தது. அணியை இறுதிப்போட்டிவரை திறம்பட வழிநடத்தினார். இக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியை தனது அதிரடி பேட்டிங்கால் துவம்சம் செய்து, ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் விளாசி, அவரது அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்தார்.
இதன்பிறகு இவரது தலைமையிலான அணி, 2005-ல், இங்கிலாந்திற்கெதிரான ஆஷஸ் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றதால், இவரது கேப்டன் பதவி குறித்து விமர்சிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 1987-ல் தான் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்திருந்தது.
இத்தோல்விகளிலிருந்து இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி விரைவிலேயே மீண்டு எழுந்தது. 2005 ஆண்டில் டெஸ்ட் அரங்கில் 1544 ரன்கள் குவித்தார் பாண்டிங். ஆஸ்திரேலிய வீரர்களில் டான் பிராட் மேன், கிரேக் சேப்பல் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் 4 முறை இரட்டை சதங்களை விளாசியுள்ளனர். இவர்களுக்கு அடுத்து 3 இரட்டை சதங்கள் விளாசியவர் ரிக்கி பாண்டிங். இக்காலகட்டத்தில் அதுவும் 5 மாத இடைவெளியில் இந்த 3 இரட்டை சதங்களையும் விளாசினார் என்பது கூடுதல் தகவல்.
இந்த தோல்விக்கு 2006-07ல் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் தக்க பதிலடி கொடுத்தார். இத்தொடரில் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஷஸ் தொடரை கைப்பற்றிக் காட்டினார். இத்தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 2 அரை சதங்கள் உள்பட 576 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இதையடுத்து 2007 உலகக்கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இவரது தலைமையில் மீண்டும் ஒருமுறை சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது. இத்தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 1 சதம், 4 அரைசதங்கள் உள்பட 539 ரன்கள் குவித்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.
டெஸ்ட் அரங்கில் 10000 ரன்களைக் கடந்த சர்வதேச வீரர்களின் வரிசையில் இவர் ஏழாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் லாராவும், இரண்டாம் இடத்தில் சச்சினும் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்களின் வரிசையில் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹிற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஒருதின அரங்கிலும் இவர் ரன்வேட்டை நிகழ்த்தியுள்ளார். 11,000 ரன்களைக் கடந்த சர்வதேச வீரர்களின் வரிசையில் இவர் ஐந்தாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சச்சினும், இரண்டாம் இடத்தில் ஜெயசூர்யாவும் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்களின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.
இவரது திறமைக்கு பரிசாக, '2006-ம் ஆண்டின் சிறந்த வீரர்' என்று விஸ்டன் பத்திரிகை விருது இவருக்கு கிடைத்தது. 2003, 2004, 2006-ம் ஆண்டுகளின் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
வெளியான தேதி: 5.9.08
LATEST SCORES
CURRENT EVENTS
- Bangladesh in Pakistan 2025
- Bangladesh in United Arab Emirates 2025
- Bulgaria Women in Estonia 2025
- Cook Islands in Japan 2025
- Germany Women in Greece 2025
- ICC Men's Cricket World Cup League Two 2023/24 to 2027
- ICC Women's T20 World Cup Asia Qualifier 2025
- ICC World Test Championship 2023 to 2025
- Japan International Twenty20 Tri-Series 2025
- Sri Lanka Women's Tri-Series 2024/25
- West Indies in Ireland and England 2025
- West Indies Women in England 2025
- Zimbabwe in England 2025
View all Current Events CLICK HERE
