CricketArchive

ஸ்ரீசாந்த்
by CricketArchive


Player:S Sreesanth

DateLine: 8th September 2008

 

முழுப்பெயர்: சாந்தகுமரன் ஸ்ரீசாந்த்

 

பிறப்பு: பிப்ரவரி, 6, 1983, கோதமங்கலம், கேரளா, இந்தியா

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை வேகம், மிதவேகப் பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: பந்துவீச்சாளர்

 

விளையாடடிய அணிகள்: இந்தியா, ஆசியா லெவன், கிங்ஸ் லெவன் பஞ்சாப், 19 வயதிற்குள்பட்டோருக்கான கேரள அணி.

 

அறிமுகம்:
டெஸ்ட் போட்டி: மார்ச் 1-5, 2006, அன்று இந்தியா - இங்கிலாந்து இடையே நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: அக்டோபர் 25, 2005 அன்று இந்தியா - இலங்கை இடையே நாக்பூரில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: டிசம்பர் 1, 2006 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இந்தியா கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான இளம் பந்து வீச்சாளர்களில் ஒருவர். கேரள மாநிலத்திலுள்ள கோதமங்கலத்தில் பிறந்தவர்.வேகப்பந்நு வீசுவதில் தனக்கென்று தனி பாணியை வைத்துக் கொண்டிருக்கும் இளம் கேரள வீரர் ஸ்ரீசாந்த்.

 

ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய கேரள வீரர் யார் என்று கேள்வி கேட்டால் உடனடியாக சொல்லப்படும் பதில் ஸ்ரீசாந்த்தான். 2002-03 காலகட்டத்தில் நடைபெற்ற துலீப் கோப்பை போட்டித் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கடுத்த வருடத்தில் காயத்தால் அவதியுற்றதால் கிரிக்கெட் விளையாடமல் இருந்தார்.

 

காயங்களிலிருந்து மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பினார். இந்த இடைக்கால ஓய்வு, பந்து வீச்சில் அவருக்கு அதிக வேகத்தையும், நேர்த்தியையும் கொடுத்தது.

 

இதனால் அக்டோபர், 2005-ல் இலங்கைக்கு எதிரான ஒருதினத் தொடரில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருதினப்போட்டியில் தனது முதன்முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

2006-ல் இங்கிலாந்திற்கெதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை ஆரம்பித்தார். டெஸ்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

மேலும் இதே அணிக்கெதிரான ஒருதினத் தொடரின் போது இரு அணிகளுக்கும் இடையே இந்தூரில் நடைபெற்ற கடைசி ஒருதினப் போட்டியில் அபாரமாக பந்து வீசி 55 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அதுமட்டுமின்றி, ஒருதின அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார். இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருதினப்போட்டிகளில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2006-ல் இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகளில் சுற்றுப் பயணம் செய்த அணியில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே ஆண்டிகுவாவில் நடைபெற்ற டெஸ்டில் அடுத்தடுத்த ஓவர்களில் சிறந்த பேட்ஸ்மேன்களான ராம்நரேஷ் சர்வானை 1 ரன்னிலும், பிரையன் லாராவை 0 ரன்னிலும் வெளியேற்றினார். இரு அணிகளுக்கும் இடையே கிங்ஸ்டனில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். இத்தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.

 

இதே வருடத்தின் கடைசியில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணியில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் டெஸ்டின், முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். (டெஸ்ட் அரங்கில் இவரது சிறநுத பந்து வீச்சு இது). இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது மட்டுமின்றி, ஆட்டநாயகன் விருதை ஸ்ரீசாந்த் பெற்றார். இத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதன்பிறகு அணியில் இடம்பெறுவதும் காயத்தால் அணியிலிருந்து நீக்கப்படுவதுமாக இருந்தார். 2008-ல் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருதினத்தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

 

அப்போது பஞ்சாப் அணியுடன் மும்பை அணி தோல்வியுற்றதால், மும்பை வீரர் ஹர்பஜன்சிங்கை கேலி செய்ததால் அவர், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்ததாக புகார் கூறப்படட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஸ்ரீசாந்திடம் 'உண்ர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளங்கள்' என்று அறிவுறுத்தியது.

 

ஆக்ரோஷமான இளம் வேகப்பந்து வீச்சாளர். எளிதில் உணர்ச்சிவசப்படும் வீரர், இந்திய அணியில் வளர்ந்து வரும் வேகப் பந்துவீச்சாளர்.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive